நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் தோழி மரணம் போலீசார் வழக்கு பதிவு.

சென்னை 25 ஜூலை 2021

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் தோழி மரணம் போலீசார் வழக்கு பதிவு.

மகாபலிபுரம் சாலையில் நேற்று நள்ளிரவு ஜூலை 24ஆம் தேதி நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி 28 வயது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்த் மது குடித்து இருந்தாரா?,விபத்திற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தீவிர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி நடிகை யாஷிகா ஆனந்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது சுயநினைவு பெற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!