மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நடிகர் விஜய் ஆன்டனிக்கு படுகாயம்.!

சென்னை 16 ஜனவரி 2023 மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நடிகர் விஜய் ஆன்டனிக்கு படுகாயம்.!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பத்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசையமைப்பாளர் மற்றும்  நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயங்கி தனது தயாரிப்பு நிறுவனமான “விஜய் ஆன்டனி பிக்சர்ஸ்” மற்றும் “பாத்திமா விஜய் ஆன்டனி” தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை
தயாரிக்கவும் செய்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் விஜய் ஆண்டனி, கடந்த 2005 ஆம் வருடம் வெளியான, ‘சுக்கிரன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி, பின்னர் திரிஷ்யம், இருவர் மட்டும், நான் அவன் இல்லை, போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் பிஸியாகியுள்ள விஜய் ஆண்டனி நடிப்பில், வெளியான ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ போன்ற திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 ,கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி திரையுலக  வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரேதிரைப்படம் என்றால் அது இயக்குனர் சசி இயக்கி விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம்  2016 ஆம் ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும், பெற்ற நிலையில் தற்போது இந்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புக்காக மலேசியாவில் உள்ள லங்காவிக்கு படக்குழுவினர் சென்று இருந்தார்கள்.

அங்கு பாடல் காட்சி படப்பிடிப்பின் போது, கிரேன் மற்றும் கேமரா போன்ற படப்பிடிப்பு சாதனங்கள் ஒரு போட்டிலும் வைத்து, நடிகர் விஜய் ஆண்டனி ஸ்ட்ரீமர் போட்டை தன்னந்தனியாக ஓட்டி வருவது போல் காட்சிகள் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அப்போது நடிகர் விஜய் ஆண்டனி அதிவேகத்தில் பைக் ஒட்டி வரும்போது படக்குழுவினர் படம் பிடித்து தேவையான சாதனங்கள் வைத்திருந்த  போட்டை ஓட்டி வரும்போது இருந்த போட்டின மீது மோதி விபத்துக்குள்ளானது இரண்டு போட்டும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி சிறிதுநேரம் கழித்து அவரது உடல் மேலே மிதந்துள்ளது.

அதன்ப்பின் அவரைத் விஜய் ஆண்டனியை தூக்கியபோது, அவரது முகம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், பற்கள் உடைந்து உடல் முழுவதும் பலத்த காயத்துடன், சுயநினைவு இன்றி இருந்துள்ளார்.

அதன் பிறகு அவரை லங்காவில் உள்ள மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

இதில் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் இருவரும் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மலேஷியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.