ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

ஹிப்ஹாப் ஆதி இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மூன்றாவது படத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், சுந்தர்சி-குஷ்புவின்ன் அவ்னி மூவிஸ் தயாரிக்கும் ‘நான் சிரித்தால்’ என்ற படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ராணா இயக்கும் இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார்.