பிரபல நகைச்சுவை நடிகரும் தயாரிப்பு நிர்வாகிமான கிருஷ்ணமூர்த்தி காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி ‘நான் கடவுள்’, ‘தவசி’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் குமுளியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 4.30 மணியளவில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதனிடையே கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தின் மூலம் இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.
இவரும்இவர் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் மற்றும் பல விளம்பரப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றி வருகிறார்











