அசுரன் படக்குழுவினரை பாராட்டிய மகேஷ் பாபு
நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 4ந் தேதி வெளியானது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
அசுரன் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில், “அசுரன் உண்மை மாறாத தீவிரமான திரைப்படம். சிறந்த படைப்பு. தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவு செய்துள்ளார்.