எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி ❗*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்குவார் என்றும் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத பணிகளை முடித்து விட்டார் என்றும் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே கூறப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினியின் நெருங்கிய நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்து அடுத்த நாளே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் ரஜினிகாந்த் தனது கட்சியை தொடங்குவார் என்றும் தெரிவித்தார். மேலும் தீபாவளி கழித்து கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

error: Content is protected !!