அம்பேத்கர் சிலை விவகாரம் – நகைச்சுவை நடிகர் கருத்து
வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒரு பிரிவினரால் சேதம் செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரும் தலைவர்களின் சிலைகள் அவர்கள் தந்த தத்துவத்தின், சேவையின் வடிவங்கள். அதை சிதைப்பது அறிவீனம். ஊர் தூற்றும். இளையோர், மரம் நடுதல் குளம் ஏரி தூர்வாருதல் ஏழை மாணவர் கல்விக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊர் போற்றும். அன்பு பரப்புவோம், உலகை அன்பால் நிரப்புவோம்” என ✍பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பெரும் தலைவர்களின் சிலைகள் அவர்கள் தந்த தத்துவத்தின், சேவையின் வடிவங்கள்.அதை சிதைப்பது அறிவீனம்.ஊர் தூற்றும். இளையோர், மரம் நடுதல் குளம் ஏரி தூர்வாருதல் ஏழை மாணவர் கல்விக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊர் போற்றும். அன்பு பரப்புவோம்; உலகை அன்பால் நிரப்புவோம்.
— Vivekh actor (@Actor_Vivek) August 27, 2019











