நகைச்சுவை நடிகர் சூரி நடத்தும் ஹோட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பும் வழங்கிய விஜய் நடிகர் சூரி.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் நகைச்சுவை நடிகர் சூரி தனது ஹோட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் ஒட்டுமொத்த உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்த வகையில் பசி தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்கள் நடிகைகளுக்கு கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது.
இந்த ஓய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
இதனைக் குறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது
தனது மனைவி குழந்தைகளுடன் பேசக் கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்திருக்கிறது.
ஓய்வில் வீட்டு வேலைகளில் மனைவிக்கு அப்படி எல்லாம் உதவ முடியுமோ அப்படி எல்லாம் உதவுகிறேன்.
எனது குழந்தைகளை குளிப்பாட்டி விடுகிறேன் சாப்பிட வைக்கிறேன் ஊரில் இருக்கும் உறவினர்களிடம் போன் மூலம் பேசி நலம் விசாரிக்கிறேன்.
அனைவரிடமும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் அன்னியர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் நடத்திவரும் ஹோட்டலில் மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள் அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன் அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன்.
அதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர் நடிகைகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மூலம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து இருக்கிறேன்.
மூன்றாம் உலகப் போர் வந்தது போல் ஒரு அச்சமும் ஒருகொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது இதனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு நகைச்சுவை நடிகர் சூரி கூறினார்











