ஆர்ச்செர்ஸ் புரொடக்ஷன் சார்பில் உதய் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார் “உதய் ” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு. நடைபெற்றது.
தான் வரைந்த ஓவியம் போல் தன் வாழ்க்கைக்கு மனைவி அமைய வேண்டும் என்று நினைக்கிறான் நாயகன், இடையில் எவ்வளவோ பெண்களை சந்திக்க நேர்ந்தாலும் யாரையும் விரும்பவில்லை. அந்த ஓவியம் போல் பெண் கிடைக்கவே தன் காதலை சொல்கிறான் நாயகன். அப்பெண் காதலை ஏற்றாளா?
என்பதே கதை.
ஆர்ச்செர்ஸ் புரொடக்ஷன் சார்பில் உதய் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார் கிடாவிருந்து எனும் படத்தை இயக்கிய தமிழ்செல்வன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
மதராஸ்பட்டினத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. நர்த்தகி, சும்மாவே ஆடுவோம், டோனி கபடிக்குழு, எந்த நேரத்திலும் ஏ.வி.எம்.-ன் அந்த நாள் போன்ற படங்களிலும் இரு மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்த லீமா இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். ரஞ்சனி , காதல் சுகுமார், நெல்லை சிவா, அம்பானி சங்கர், தாரைதப்பட்டை காஞ்சனா, சேலம் தமிழ், செந்தில்குமார் , ரமேஷ், R. சேகர், LR.விஜய், ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு
– A.S. ராஜ்
இசை
தீபக் ஹரிதாஸ்
பாடல்கள்
செல்வராஜா, லட்சுமிபதி, சரண்
நியாஸ்
படத்தொகுப்பு
காளிதாஸ்
நடனம்
ஸ்டைல் பாலா
ஸ்டண்ட்
‘இந்தியன் பாஸ்கர்
தயாரிப்பு
K.S. உதயகுமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
தமிழ் செல்வன்











