இந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது – ஆர்.கே.செல்வமணி வருத்தம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடந்த டிவி சீரியல் ( சின்னத்திரை ) படப்பிடிப்புகளையும் திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் மீண்டும் துவங்க கடந்த மாதம் கடுமையான நிபந்தனைகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுமதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடுமையாக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நான்கு மாவட்டங்களிலும் வரும் ஜூன் மாதம் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

இதை அடுத்து வரும் ஜூன் மாதம் 19-ஆம் தேதி முதல் டிவி சீரியல் ( சின்னத்திரை ) படப்பிடிப்பு திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ( பெஃப்சி ) தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் ( சின்னத்திரை ) டிவி சீரியல் படப்பிடிப்புகள் முடங்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பில் இருந்து தொழில்துறைகள் மீண்டு வர ரூபாய் 20 லட்சம் கோடி நிவாரண நீதியாக அறிவித்துள்ள மத்திய அரசு திரைப்பட த்துறைக்கு நிவாரணம் வழங்காதது வருத்தம் அளிக்கிறது என்று ( பெஃப்சி ) தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ( பெஃப்சி ) சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

“கொரோனா வைரஸ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாகவும், வேகமாகவும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ஜூன் 19 அம தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இதனால், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஜூன் 19 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள், திரைப்பட பின்னணி வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு முழு வேகத்துடன் செயல்பட்டு வந்தாலும், பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த இயலும். அதனால் தயவு செய்து தமிழக மக்கள் இந்த நோய் தொற்றை தடுக்க தமிழக அரசுக்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை உணர்ந்து திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களோடு இணைத்து கருணையோடு நிவாரணம் அளித்த எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மத்திய அரசுக்கு திரைப்படத் துறை மற்றும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகன் அவர்களுக்கும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.

அதுபோன்ற கொரோனா பாதிப்பிலிருந்து தொழில்துறைகள் மீண்டும் மீண்டு வர ரூபாய் 20 லட்ச கோடி ரூபாய் மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது.

அந்த ரூபாய் 20 லட்ச கோடி ரூபாயில் எந்த நிதியும் இந்திய திரைப்படத்துறைக்கோ, இந்திய திரைப்படத் தொழிலாளர்களுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறோம்.

மாநில அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்துள்ள நிலையில், மத்திய அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தயவு செய்து எங்கள் திரைப்படத் துறைக்கும் நிவாரணம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!