எந்திரன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு டூப் போட்டது இவர்தான் :?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டூப் போட்டது யார் என்பது குறித்த ரகசியம் சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரௌப்படம் எந்திரன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு பிரம்மாண்ட வெற்றியும் பெற்றது.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார்.

இதில் வசீகரன், சிட்டி இருவரும் வரும் காட்சிகளில் பாடி டபுள் என்கிற வகையிலான டூப் போட்டு நடித்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் கே பாரதி. எந்திரன் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆன நிலையில், மனோஜ் கே பாரதி தற்போது அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மனோஜ் கே பாரதி எந்திரன் திரைப்படத்தில் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

error: Content is protected !!