கல்லூரிகள் பள்ளிகள் & தியேட்டர்கள் & மால் பூங்காக்கள் மற்றும் டாஸ்மாக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுக்க 5000 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மை மாநிலமான கேரளாவில் இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு மார்ச் 31ஆம் தேதி வரை ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.

தற்போது தமிழகத்திலும் இந்த கொரோனா பீதி அதிகரித்துள்ளது.

மார்ச் 19 முதல் மார்ச் 31வரை சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் மாக், தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண, சுப காரியங்களில் நிறைய பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரணி, ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!