காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை சாய் சுதா புகார்…. மகேஷ் பாபு திரைப்பட ஒளிப்பதிவாளர் அதிரடியாக கைது.

தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை சாய் சுதா அளித்த புகாரின் பேரில் போக்கிரி பட ஒளிப்பதிவாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா.

இவர் கடந்த 7 வருடங்களாக ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார்.

இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி கணவர் மனைவியாக வாழ்ந்து வந்தாராம் ஒளிப்பதிவாளர் ஷியாம்  கே நாயுடு.

ஆனால்  வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஒளிப்பதிவாளர்
ஷியாம் கே நாயுடு தன்னை ஏமாற்றி விட்டாதாக கூறி நடிகை சாய் சுதா காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் ஒளிப்பதிவாளர்
ஷியாம் கே நாயுடுவை உடனடியாக கைது செய்தனர்.

ஒளிப்பதிவாளர்
ஷியாம் கே நாயுடுவிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!