குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் – சாதக பறவைகள்’ சங்கர்
தமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் ‘சாதக பறவைகள்’ சங்கர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.
சாஸ்திரீய இசை அனைவருக்கும் புரியவில்லை என்ற போதிலும், ராகத்திலும் தாளத்திலும் மயங்கி, மொழியும் அர்த்தமும் புரியாமல் ரசித்து வந்த நிலையில், எளிய தமிழில் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இசைப்பங்களிப்புப் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் பக்தி இலக்கிய படைப்புகளை உருவாக்கிய அவர், திருவாசகம், பன்னிரு திருமுறைகளுக்கு அப்பாற்பட்டு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் பாடல்களை உருவாக்கினார்.
அவரது மகனான ‘சாதக பறவைகள்’ இசைக்குழு அமைப்பாளர் சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர், தொடர்ந்து நடத்தியும் வருகிறார். தீவிர இசை ரசிகர், பல்வேறு இசை வடிவங்களில் முறையான தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தீரத் தீர் எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘அக்கப்பல்லா’ என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே ஒரு முழுப்பாடலையும் வடிவமைத்திருக்கிறார். இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குனர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
வார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தயானந்தன் இயக்கத்தில், உருவாகியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
Related posts:
தனி ஒருவன் திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்,
மிருகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். நடிகை நாய்ரா ஷா.
கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு வரும் நடிகர் ஷர்வானந்த்!
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் “ஹிட்லிஸ்ட்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார்!
சாணிக் காயிதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக இயக்குநர் செல்வராகவன் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்.
“கொடுவா” திரைப்படத்தின் மூலம் நடிகர் நிதின் சத்யா மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார்!
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா.
மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம் | விஜய்டிவி புகழ் காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணைந்து நடிக்கிறார்கள்
பரிவர்த்தனை திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்.!!!

