கைதி ரீமேக்..பாலிவுட் செல்லும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்
தீபாவளி விருந்தாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கைதி படம் கடந்த அக். 25ல் ரிலீசானது.
இந்த படத்துடன் மற்றொரு படம் வந்தாலும் கைதி தான் நிஜமான தீபாவளி ட்ரீட் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சாம் சிஎஸ் இசையமைத்திருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர். பிரபு தயாரித்திருந்தார். இவருடன் திருப்பூர் விவேக் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பிரபல நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்க, கார்த்தி வேடத்தில் சாகித் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னடத்திலும் இப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்











