100 மேல் தந்த ‘கைதி’ திரைப்படத்தைப் பாலிவுட்டுக்கு கொண்டு செல்லும் – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
கடந்த 2019 தீபாவளியன்று கைதி படம் வெளியானது.
இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருந்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.
அதுமட்டுமில்லாமல், நடிகர் கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாம்.
இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள்.
இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.











