கொரோனா தொற்றுக் காரணமாக கஜினி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் காலமானார்.
சென்னை 11 மே 2021
கொரோனா தொற்றுக் காரணமாக தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் காலமானார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்திய முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
இதில் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் காரணமாக இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி என சிலர் இறந்து உள்ளனர். 
சேலம் சந்திரசேகர் ஸ்ரீ சரவணா கிரியேசன்ஸ் என்ற பெயரில் பல திரைப்படங்கள் தயாரித்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா நடித்த கஜினி, தனுஷ் நடித்த சுள்ளான்
நடிகர் பரத் நடித்த பிப்ரவரி 14 & கில்லாடி விஜயகாந்த் நடித்த சபரி ஆகிய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு காலமானார்.
இவர் கொரோனா தொற்று காரணமாக சேலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7.15 மணியளவில் உயிரிழந்தார்
இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.











