ஒரு லட்சம் திரைப்பட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார்…!

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி

வேலையின்றி தவிக்கும் ஒரு லட்சம் திரைப்பட தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான தேவையான மளிகை பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து
நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள்.மால்கள் மூடப்பட்டிருப்பதுடன், பாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அதனை மட்டுமே நம்பியுள்ள திரைப்பட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எதிர்பாராத சூழலில் நாம் இருக்கும் நிலையில், பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் திரு. அமிதாப் பச்சன் மற்றும் வி ஆர். ஒன் ஆதரவுடன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மூலம், நாடு முழுவதும் ஒரு லட்சம் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை அளிக்க உள்ளோம் என சோனி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுடன் வணிகரீதியாக இணைந்து, அனைத்து இந்திய சினிமா தொழிலாளர் கூட்டமைப்பில் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பார்கோடு உடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கப்படுமென தெரிவித்துள்ளது.

எப்போது முதல் சினிமா தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் துவங்குகிறது என்பதை சோனி நிறுவனம் தெரிவிக்கவில்லை.

சோனி நிறுவனத்தின் சி.இ.ஓ , என்.பி.சிங் கூறியதாவது: சோனி பிக்சர்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர் செயல்பாட்டின் ஒரு பகுதியாக , அமிதாப்பச்சனுடன் இணைந்து தினக்கூலி அடிப்படையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் சோனி நிறுவனத்தின் கோன் பனேஹா குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்தி வருகிறார். குறைந்தபட்சம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அளிப்பதற்கு உறுதி அளித்துள்ளார்.

கொரோனா சமயத்தில் வீட்டில் இருப்பதன் முக்கியத்துவம், சமூக விலகலை கடைப்பிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோனி நிறுவனம் தயாரிக்கும் ‘ ஃபேமிலி’ என்ற குறும்படத்தில் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அமிதாப் பச்சன் தோன்றவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

நம்ம தமிழ் நாட்டின் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் தீபம் மட்டும் ஏற்றினார். என்பது குறிப்பட தக்கது.

error: Content is protected !!