சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் தலைமைக்கு மதுரையில் போஸ்டரின் முலம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை.
சிஸ்டம் சரியில்லை அதை சரிசெய்ய படித்தவர்கள் இளைஞர்கள் நல்லவர்கள் முன்வரவேண்டும்.
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இருக்காது.
ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற தனது கட்சி நிலைப்பாட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
மேலும் “பதவிக்காக வருபவர்கள் என்னுடன் வர வேண்டாம், சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் என்னுடன் வரட்டும் என்பதே என் கொள்கை” என அவர் கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஒரு போஸ்டரில் தலைவர் தலைமையில் அரசியல் புரட்சிக்கு ஒன்றிணைவோம் என்று எழுதப்பட்டுள்ளன.
மற்றொரு போஸ்டரில் ஊரை கூட்டுவோம் உணர்வை காட்டுவோம் கடமையாற்றும் சிஸ்டத்தை மாற்றுவோம் இப்படி எழுதப்பட்டுள்ளன.












