செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “
பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்.
இதை ஒரு க்ரைம் திரில்லர் படமாக நீங்கள் பார்க்கலாம்” என்றார்.
இப்படத்தில் நாயகனாக நடிக்கும் செங்குட்டுவன் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அவரது கதாப்பாத்திரம் வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாயகனுக்கு இணையானதாக நாயகி பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமீபத்தில் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட “அசுரன்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்த அம்மு அபிராமி இப்படத்தில் நாயகி பாத்திரம் ஏற்றுள்ளார். மேலும் “கைதி” படத்தில் மக்களிடம் கைத்தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.
பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. விழாவில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
SRI ANNAMALAIYAR MOVIES
PRODUCTION NUMBER – 3
BATTERY
ARTISTE –
HERO – SENGUTTUVAN
HEROINE – AMMU ABIRAMI (RAATCHASAN, ASURAN)
RAJ DEEPAK SHETTY (INTRODUCTION)
YOG J B
GEORGE MARIYAN
RAJ KUMAR
NAGENDRA PRASAD
ABHISHEK
TECHNICIANS –
STORY, DIRECTION – MANIBHARATHI
DIALOGUE, SCREEN PLAY – RAVIVARMA PACHAIYAPPAN
MUSIC DIRECTOR – SIDDHARTH VIBIN
CINEMATOGRAPHER – K.G. VENKATESH
EDITOR – RAJESHKUMAR
ART DIRECTOR – M. SIVAYADAV
STUNT MASTER – HARIDINESH
LYRICS – JAYANTHA, DHAMAYANTHI
P R O – JOHNSON
EXECUTIVE PRODUCER – A. JAI SAMPATH
CO PRODUCER – C.M. GOPINATH, C.M. SENGUTTUVAN
PRODUCER – C. MADHAIYAN
—
Related posts:
பால முருகன் – அம்மு அபிராமி – “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”!
Think Music Originals வழங்கும், நடிகர் ரியோ ராஜ், நடிகை அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் !
ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.
நடிகை அம்மு அபிராமி நடிக்கும் போகாதே இசை ஆல்பம் மூலம் களமிறங்கும் இசையமைப்பாளர் சி சத்யா.
இயக்குநர் R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது.
நடிகர் ரியோ ராஜ், நடிகை அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !
“பாபா பிளாக் ஷீப்” படப்பிடிப்பில் அனைவரையும் அழ வைத்த விருமாண்டி நடிகை அபிராமி !!
மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ்
கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக நடிகர் தனுஷ் ரசிகர்கள் செய்த பெரிய காரியம்

