பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கும் சினிமா பத்திரிகையாளர்களுக்கும் அரிசியும் வழங்கி இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நமது மத்திய அரசும் மாநில அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் உள்ள தொழிலாளர்கள் இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாமல் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை போல, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் பாதிக்கப்பட்டு உள்ள சினிமா பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உதவும் வகையில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அஜித்குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ ஆகிய உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை பார்வதி நாயர்,
தற்போது, தமிழில் ‘ஆலம்பனா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை பார்வதி நாயர், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் நடிப்பதோடு, வெப் சீரிஸ்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் அஜித்குமார் எப்படி அனைத்து தரப்பினருக்கும் நிதியுதவி எப்படி பிரித்து வழங்கினாரோ அது போன்று நடிகை பார்வதி நாயரும், திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தமிழ் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 10 கிலோ வீதம் 150 மூட்டைகள் 1500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு,
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின சார்பில் சம்மேளனத்தின் தலைவர் திரு R.K செல்வமணி மற்றும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு அங்கமுத்து சண்முகம் சமையல் எத்தனை பொது செயலாளர் திரு B.N. சுவாமிநாதன் ஆகியோர் நடிகை பார்வதி நாயருக்கு நன்றியை தெரிவித்தனர்.
அதேபோல் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு
10 கிலோ வீதம் 75 மூட்டைகள் 750 கிலோ அரிசியை வழங்கியுள்ளார்.
இந்த கடினமான சூழ்நிலையில், சினிமா பத்திரிகையாளர்களின் நிலை அறிந்து உதவி செய்த நடிகை பார்வதி நாயருக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தை சார்ந்த
தலைவர் திரு. D.R.பாலேஷ்வர்
பொதுச் செயலாளர்
திரு. R.S. கார்த்திகேயன்
பொருளாளர் திரு. மதிஒளிகுமார் ஆகியோர் நிதியுதவி வழங்கியவர்கள் அரிசியாக வழங்கியவர் அனைவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.












