தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை இயக்கும் இருமுகன் இயக்குனர்
சுந்தர் சி இயக்கி வரும் ‛ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
இப்படம் தற்போது துருக்கியில் படமாக்கப்பட்டு வருகிறது. வில்லனாக வேதாளம் பட புகழ் கபிர் துகான் சிங் நடித்து வருகிறார்.
இதனையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் விக்ரமின் இருமுகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.











