பாலிவுட் நடிகர் அமீர்கான் வழங்கிய 1Kg கோதுமை மாவு வாங்கியவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிதான்
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஒட்டு மொத்த உலகமே முடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏழை மக்களுக்கு பல பிரபலங்கள் உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் கொரோனா நிவாரணம் நிதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அட என்னய்யா? இந்த நடிகர் வெறும் ஒரு கிலோ கோதுமை மாவு மட்டும்தான் கொடுக்கிறாரு என்று பலரும் அதை வாங்கவில்லையாம்.
ஆனால் ஒரு கிலோ கோதுமைக்கு கூட வழியில்லாத பரம ஏழைகள் மட்டுமே ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
அதன் பின்னர்தான் அவர்கள் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட் வாங்கியவர்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டசாலிகள் என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கும்.
ஏனென்றால் வீட்டுக்கு சென்று கோதுமை மாவு பாக்கெட் டை திறந்து பார்த்தால் அதில் ரூபாய்15 ஆயிரம் இருக்கிறதாம்.
பாலிவுட் நடிகர் அமீர்கானின் இந்த நூதன கொரோனா நிவாரண உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் இருந்த விஷயம் அந்த பாக்கெட்டை வினியோகம் செய்த அவரது உதவியாளர்களுக்கு கூட தெரியாது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதேபோல் தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு நடிகரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.











