நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லாமையை ஏற்க முயன்று வருகிறோம்” பத்மஸ்ரீ கமல்ஹாசன்.

தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திலகத்தின் நடிப்பைப் போல, அவரது மனித உடலும் சாகாவரம் பெற்றது என மற்ற அப்பாவி ரசிகர்களைப் போலத்தான் நானும் நம்பினேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும், அவர் மகன்களும், ரசிகர்களும், அவர் இல்லாமையை ஏற்றுக்கொள்ள இன்னமும் முயன்று வருகிறார்கள். நடிகர் திலகம் என்கிற அப்பாவுக்குப் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!