தென்னிந்தியா நடிகர் சங்கத்துக்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் கண்டனம் ❗

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை ஏனோதானோவென்று அணுகியதாக தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு சிவாஜிகணேசன் சமூகநலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவாஜிகணேசன் சமூக நலப்பேரவை விடுத்திருக்கும் அறிக்கையில், “உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிய வேளையில். தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு மட்டும் இதனைக் கொண்டாட நேரமில்லை. ஏற்கெனவே ஜுலை 21ம் தேதி, நடிகர்திலகத்தின் நினைவுநாள் என்பதையே தென்னிந்தியா நடிகர்சங்கம் மறந்துபோனது. உலகளவில் தமிழ் சினிமாவை உயர்த்திய, தமிழ்க்கலையின் அடையாளமாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள், கலைஞர்களை தமிழ் சமூகம் மன்னிக்காது” என்று தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சமூகநலப்பேரவை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

error: Content is protected !!