நடிகர் யோகிபாபு – மஞ்சு பார்கவி திருமணம் மிகவும் எளிமையாக குலதெய்வம் கோயிலில் மிக சிறப்பாக நடந்தது.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு.
இவையில்லாமல் தர்ம பிரபு, ஜாம்பி, கூர்கா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இவரின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று பிப்ரவரி 5ஆம் தேதி ஆரணயில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
யோகி பாபுவின் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
தர்மபிரபு பட இயக்குனர் இயக்குனர் முத்துகுமரன் இதில் கலந்துக் கொண்டார்.
திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











