சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் அனல் பறக்க போவது உறுதி என்பதை திரைப்படத்தில் புதியதாக இணைந்த பிரபலம்.!!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் அனல் பறக்க போவது உறுதி என்பதை திரைப்படத்தில் புதியதாக இணைந்த பிரபலம்.!!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 22) சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தோற்றத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில் ஜெயிலர் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

முதலில் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

சண்டை பயிற்சிய இயக்குனர் ஸ்டண்ட் சிவாதான் ஒப்பந்தமாகியுள்ளார்.

கூடவே அவருடைய மகன்கள் கெவின் மற்றும் ஸ்டீவனும் இந்த திரைப்படத்தின் பணிபுரிகின்றனர்.

தெலுங்கு திரைப்படமான பாலகிருஷ்ணாவின் அகாண்டா திரைப்படத்தில் இந்த தந்தை மகன் கூட்டணி வடிவமைப்பு செய்த சண்டைக்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்தில் சண்டைக்காட்சி அனல் பறக்கும் அளவுக்கு இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.