ஏன் மிது அரசியல் சாயம் பூச வேண்டாம் நடிகர் விஜய்..
சென்னை 06 ஏப்ரல் 2021
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவை செலுத்த நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இன்று ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஓரே கட்டமாக தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்கு பதிவு இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.
காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்று வந்த நிலையில் மதியம் சில பகுதிகளில் சலசலப்பு ஏற்பட்டு பின் அதிகாரிகளால் சரி செய்யப்பட்டது.
இதில் திரை உலக பிரபலங்கள் அவர அவர் தொகுதிக்கு உடபட்ட பகுதியில் காலையில் வந்து வாக்கு செலுத்தி விட்டு சென்றனர்.
அஜித்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அவரது மகள் அக்ஷரா ஹாசன் ஸ்ருதிஹாசன், விஜய், சிவக்குமார், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி ஜெயம் ரவி, என பல பிரபலங்கள் காலை முதல் மாலை வரை வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதில் நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து அவருடைய ஜனநாயக கடமையை செய்தார்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இவர் பெட்ரோல் விலை,மற்றும் டீசல் விலையை, கண்டித்து இவ்வாறு சைக்கிளில் வந்தார் என அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால் விஜயின் தரப்பு இதனை மறுத்துள்ளது.
வாக்கு பதிவு மையம் வீட்டுக்கு அருகில் இருந்ததால் காரில் செல்ல முடியாத குறுகலான தெரு என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றார் இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.











