மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம் ரேட்டிங் –3.25 /5.

நடிகர் நடிகைகள் – மோகன்லால் , அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரணவ் மோகன்லால், மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், ஆண்டனி பெரும்பாவூர், . முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர்.
தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ்.
இயக்கம் – பிரியதர்ஷன்
ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு
.
படத்தொகுப்பு – மீ எஸ் ஐயப்பன் நாயர்.
.
இசை – ரோனி நபேல் ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்.
திரைப்படம் வெளியான தேதி – 03 டிசம்பர் 2021
ரேட்டிங் –3.25 /5
1996ஆம் ஆண்டு மோகன்லால் பிரபு இயக்குநர் பிரியர்தர்ஷன் கூட்டணியில் வெளியான ‘சிறைச்சாலை’ திரைப்படத்துக்குப் பிறகு திட்டமிடப்பட்ட இப்படம் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி இருக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் சாமுத்ரி ராஜ்ஜியத்தில் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதையை மையமாக வைத்து ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ என்ற திரைப்படம் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் என்கிற கடற்படை தலைவன் பற்றிய வீர வரலாறாக உருவாகியுள்ளது.
சிறு வயது முதலே தாய்யின் அரவணைப்பில் செல்லப்பிள்ளையாக வளர்கிறார் முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர் கதாநாயகன் மோகன்லால் இவருக்கு திருமணம் நடப்பதற்கு முதல் நாள் மணபெண்ணான கல்யாணி பிரியதர்ஷன் உட்பட ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பத்தையும் போர்ச்சுகீசிய படைகளின் உதவியுடன் எதிரிகள் அனைவரையும் கொன்று விடுகிறார்கள்.
இந்த தாக்குதலில் தனது சித்தப்பாவுடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல வாழ்கிறார் கதாநாயகன் மோகன்லால்.
ஆட்சியாளர்களிடமிருந்து உணவு தானியங்களை கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு கொடுத்து உதவுகிறார் கதாநாயகன் மோகன்லால்.
போர்ச்சுகீசியப் படைகளை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர் கதாநாயகன் மோகன்லாலின் உதவியை நாடுகிறார்.
இறுதியில் கதாநாயகன் மோகன்லால், சாமுத்ரி அரசருடன் இணைந்து போர்ச்சுகீசிய படைகளை வீழ்த்தினாரா? இல்லையா? என்பதுதான் இந்த மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் திரைப்படத்தின்
மீதிக்கதை.
குஞ்சாலி மரைக்காயராக கதாநாயகன் மோகன்லால்.
கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார் கதாநாயகன் மோகன்லால்.
இந்த கதாபாத்திரத்தில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி சின்ன சின்ன அசைவுகளில் கூட மிக அருமையாக அசத்தி இருக்கிறார்.
நெடுமுடிவேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பெரடி என திரைப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் மிக அருமையான கதாபாத்திரங்களை வடிவமைத்து அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைத்தும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இளவயது மரைக்காயராக வரும் ப்ரணவ் மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
இவரது ப்ரணவ் மோகன்லாலின் நடிப்பு நடனம் சிறு சிறு அசைவுகள் கூட மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
தந்தையை மிஞ்சிய நடிப்பு மிகவும் அருமை.
குறைந்த நேரமே திரைப்படத்தில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நடிப்பை உண்மையாக செய்துள்ளார்.
திரைப்படத்தில் இத்தனை நடிகர்கள் இருந்தும் அவர்கள் யாருக்குமே கதாபாத்திரங்களில் படைப்பு சரியாக அமையாமல் போனது மிகவும் சோகம்.
கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, ஹரீஷ் பெரடி, சுனில் ஷெட்டி என அனைவரது கதாபாத்திரங்களும் சரியாக பயன்படுத்தபடவில்லை.
திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பலவீனம்.
திரைப்படத்திற்கு மிக பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள்.
இதற்கு துணையாக நின்ற கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோருக்கு பெரிய பாராட்டுகள்.
அதுபோல், திரைப்படத்தில் போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்க வைக்கின்றன.
திரைப்படத்திற்கு
ரோனி ரஃபேல் ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லயல் இவான்ஸ் ரோடர் ஆகியோர் இசையமைத்து பாடல்களும் பின்னணி இசை மிகவும் அருமை.
கலகலப்பான, உணர்வுப்பூர்வமான திரைப்படங்களையே கொடுத்துவந்த இயக்குனர் பிரியதர்ஷன்.
வரலாற்று கதைகளையும் தன்னால் இயக்க முடியும் என சாதித்து காட்டியுள்ளார்.
ஏற்கனவே வாழ்ந்த ஒரு வீரனின் கதை தான் என்பதால் மிகப்பெரிய பில்டப் காட்சிகள் எல்லாம் இல்லாமல், கதையின் போக்கிலேயே திரைப்படத்தை நகர்த்தி சென்றுளார்.
மூன்று மணி நேர திரைப்படம் என்பதுதான் திரைப்படத்திற்கு எதிர்மறையான அம்சமாக தெரிகிறது.
அதிலும் இடைவேளைக்கு முதலான ஒன்றரை மணி நேரம் வேகமாக பறந்துவிட்டாலும் கூட, கடைசி முக்கால் மணி நேரம் ரொம்பவே மெதுவாக நகர்கிறது.
ஆனாலும் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் இவரால் இப்படிக்கூட படம் எடுக்க முடியுமா என்கிற பிரமிப்பை நம் மனதில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.
மொத்தத்தில் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ ரசிக்கலாம்.











