பிரபல நடிகரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று காலமானார்.
சென்னை : 25 செப்டம்பர் 2020
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அதனைத தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல் வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.
நேற்று செப்டம்பர். 24 ல் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து சென்றார்.
அப்போது அவர் கூறும்போது… எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலமாக இல்லை.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.
அவர்களது உறவினர்கள் அவர்கள் நம்பும் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் என சொன்னார்.
இந்த நிலையில் எஸ். பி. பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று செப்டம்பர் 25-ஆம் தேதி அவர் சரியாக 1.04PM மணிக்கு இறந்துள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஆனால் இன்னும் மருத்துவனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகவில்லை.
இதனையடுத்து எஸ்..பி.பி. சரண் அவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் இறுதி சடங்கு சென்னையில் பக்கத்தில் செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் நடைபெறும்.
#RIPSPB 1:04pm
— venkat prabhu (@vp_offl) September 25, 2020











