இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
சென்னை 04 மார்ச் 2022 இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்
சென்னை வடபழனி உள்ள கமலா திரையரங்கில் நடை பெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் இயக்குனர் திரு. ஆர்.கே.செல்வமணி தலைமையிலான இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இயக்குநர்கள் திரு.விக்ரமன், திரு.ஆர்.வி.உதயக்குமார் (செயலாளர்), திரு.பேரரசு(பொருளாளர்), திரு.ரமேஷ்கண்ணா, திரு.எழில், திரு.ரவி மரியா, திரு.திருமலை இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும்
65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர்
D.R.பாலேஷ்வர், மற்றும்
பொதுச்செயலாளர்- R.S.கார்த்திகேயன் , பொருளாளர் – மரிய சேவியர் ஜாஸ்பெல் மற்றும் துணைத்தலைவர் – ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் , இணைச்செயலாளர் – மதிஒளிக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் மரியாதை செய்தனர்.