இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.!

சென்னை 04 டிசம்பர் 2022 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.!

தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகர் மறுப்பு.!

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தை தளபதி நடிகர் விஜய் நடித்து முடித்துவிட்டார்.

இந்த வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த வாரிசு திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.

இதையடுத்து வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் வில்லன்களாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நவரச நாயகன் கார்த்திக்கிடமும் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.