மூத்த கலைஞர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர் !

தமிழ் திரைப்பட உலகில் மூத்த நடிகர் சாருஹாசன்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும். என்று மத்திய அரசுக்கு தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ  ஜி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு தாதா 87 திரைப்படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் அடியெடுத்து வைத்தவர் மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான சாருஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரான இவர் தமிழ் சினிமாவில் பல முக்கியமான வெற்றி பெற்ற உதிரிப்பூக்கள், வேதம் புதிது, தளபதி திரைப்படங்களுக்கு  வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

90 வயதான இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட வேண்டும், அதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ‘தாதா 87’ படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ‘87வயதில் தாதாவாக நடித்த மூத்த நடிகர் சாருஹாசன் அவர்கள் இன்றும் 90 வயதில் தொடர்ந்து இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வயதான நடிகராக தொடர்ந்து நடிக்கும் சாருஹாசன் அவர்களுக்கு மத்திய அரசின் சாதனையாளர் விருது வழங்க தமிழக முதல்வர் அவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!