விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் இடத்தில் தகவல் தொடர்பு துண்டிப்பு

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வினை காண பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள பீனியா செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்திற்க்கு வருகை தந்திருந்தார்.அந்த லேண்டர் நிலவில் கால் பாதிக்கும் தருவாயில் தகவல் தொடர்பின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் என்ன நேர்ந்தது என்றதன் நிலைப்பாடு தெரியாமல் தகவலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே பிரதமர் மோடி, “நம்பிக்கையை இழக்க வேண்டாம், உங்கள் முயற்சி சாதாரணமானவை அல்ல. இஸ்ரோ விஞ்ஞானிகளை கண்டு இந்தியா பெருமை படுகிறது” என்றும், தைரியமாக இருங்கள் என்றும் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு வந்திருந்த மாணவர்களுடன் பேசிய மோடி, அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!