எனது தந்தை விக்ரம் எனர்ஜிக்கு இதுதான் காரணம் தந்தையை பற்றி என நடிகர் துருவ் விக்ரம் நெகிழந்தார்.!!

சென்னை 25 ஆகஸ்ட் 2022 எனது தந்தை விக்ரம் எனர்ஜிக்கு இதுதான் காரணம் தந்தையை பற்றி என நடிகர் துருவ் விக்ரம் நெகிழந்தார்.!!

தமிழ் திரைப்பட துறையில் நடிகராவதற்கு நிறைய கஷ்டங்களையும் அதிகமான போராட்டங்களையும் தாண்டி வந்ததால் சோர்வடைவதில்லை என தன்னுடைய தந்தை கூறியதாக நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்தார்.

இந்த கோப்ரா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் திருச்சி, மதுரை, கோவை மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாத சிறந்த அனுபவமாக இருந்தது என நடிகர் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம் இந்த மாதம் 31ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக வெளி வருகிறது.

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.

இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகைகள் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி ஆகியோர் சென்று இருந்தனர்

அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

அது குறித்து சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சியான் விக்ரம், திருச்சி – மதுரை – கோவை ஆகிய இடங்களில் மக்கள் காட்டிய அன்பு சிறந்த அனுபவமாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்குபின் ரசிகர்களை சந்திக்கிறேன் என தெரிவித்தார்.

இதேபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

அந்த நிகழ்வில் நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மூன்று வருடங்களுக்கு முன்பு, இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கற்பனை மற்றும் எண்ணத்தின் மீது நம்பிக்கை உள்ளது.

அதற்காக இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று தந்தை கூறினார்.

அதேபோல் மகான் படப்பிடிப்பில் சில காட்சிகளில் நான் சோர்வடைந்தேன்.

ஆனால் தந்தை எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எனர்ஜியாகவே இருந்தார்.

அது எப்படி என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு நடிகராக பல கஷ்டங்களையும், போராட்டங்களையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

எனவே இதெல்லாம் சாதாரணம் என்று கூறினார் என நடிகர் துருவ் விக்ரம் நெகிழந்தார்.

மேலும் அதை அவரிடம் இருந்து தானும் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!