விஜய் சேதுபதிக்கு வில்லனாக மாறிய இயக்குனர்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘விஜய் சேதுபதி 33’ படம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் எஸ் பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த, வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்குகிறார். இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். ‘தடம்’, ‘தடையற தாக்க’ படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.

CLOSE
CLOSE
error: Content is protected !!