17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி

பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவுகள் வலுவானவையாக இருக்கும். இந்த முறை இன்னொரு ‘சிக்கல்’, ஆனால் அது மாதவன் மற்றும் சிம்ரன் குடும்ப உறவுகளுக்குள் அல்ல, வெளிப்புறத்தில். ஆம், 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான ‘ராக்கெட்ரி’ படத்தில் தான் இவை இடம் பெறுகிறது.

ராக்கெட்ரி மிகவும் தீவிரமான கதையை கையாள்கிறது. இது நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அது கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கொண்டிருக்கும். ஒரு அற்புதமான நடிகையாக இருப்பதால், ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தும் பழக்கத்தை சிம்ரன் எப்போதும் வைத்திருக்கிறார். இது இந்த படத்திலும் கூட அப்படியே தொடர்கிறது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், ஆன்லைன் மற்றும் அனைத்து ஊடக தளங்களிலும் மிகப்பெரிய அளவில் பரவி, நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ‘ராக்கெட்ரி’ படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘ராக்கெட்ரி – நம்பி எஃபெக்ட்’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு நடக்க நடக்க படிப்படியாக அதிக கவனத்தை ஈர்த்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், மாதவன் சால்ட் அண்ட் பெப்பர் நிற முடியை கொண்ட நம்பியாக மாறியது, அவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதும், இந்த புதிய புகைப்படமும் நம் கண்களை இமைக்க விடாமல் செய்திருக்கின்றன. 1990களில் நம் நாட்டில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகிறது. ISRO விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் ஒரு கிரையோஜெனிக் நிபுணர், அவரை ஒரு உளவாளி என கைது செய்து, பல ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்தார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.