திரைப்பட உலகில் உள்ள பிரபலங்களின் பிறந்த நாட்களும் வளரும் மரக்கன்றுகளும் ராயல் பிரபாகர்.
சென்னை : 24 அக்டோபர் 2020
தமிழ்சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்த நாட்களை மற்றவர்களுக்கு நினைவூட்டி பிறந்தநாள் கதாநாயகர்களை மகிழ்ச்சி அ
டையச் செய்யும் உணர்ச்சிகரமான சேவையை சுமார் 14 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
பி.ஆர்.கே சினி காலண்டர் ராயல் பிரபாகர் மேலும் பிறந்தநாள் காணுபவர்களின் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்வதை எட்டு வருடங்களாகச் செய்து வருகிறார்.
தற்போது பிரபலங்களின் பிறந்த நாட்கள் மூலமாக இயற்கைக்கு நன்றி செலுத்தி நாட்டுக்கும் நன்மை பயக்கும் விதமாக பிறந்தநாள் கதாநாயகர்களை மரக்கன்றுகள் நட வைத்து அதை முறைப்படி வளர்க்கவும் ஏற்பாடு செய்து வருகிறார் ராயல் பிரபாகர்.
சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் சீனு ராமசாமியின் பிறந்தநாளின் போது இந்த அரும்பணியைத் துவங்கினார்.
அதைத் தொடர்ந்து இன்று பூமணி பூந்தோட்டம் உள்பட தரமான கதை அம்சம் உள்ள படங்களைத் தந்த இயக்குநர் களஞ்சியம் அவர்களின் பிறந்தநாள் என்பதால் காலையிலே அவரின் அலுவலகத்திற்கு மரக்கன்றோடும் கோவிலில் செய்த அர்ச்சனைப் பிரசாதத்தோடும் சென்றார் ராயல் பிரபாகர்.
ராயல் பிரபாகரை வரவேற்ற இயக்குநர் களஞ்சியம் மரக்கன்றை மகிழ்ச்சியோடு நட்டு மருதுபாண்டியரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் போது ராயல் பிரபாகரையும் உடன் அழைத்து கெளரவித்தார்.











