பள்ளிகள் கல்லூரிகள் & திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு நவம்பர் 30 வரை ஊரடங்கு நீடிப்பு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியது.
இதன் காரணமாக நாடு முழுவதிலும் கடந்த 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை மால்கள் ஊரடங்கு காரணமாக அனைத்தும் மூடப்பட்டன.
நடப்பு கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிவுற்ற நிலையில் இன்னும் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
எனவே மாணவர்களின் அக்கறையில் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டது..
கடந்த மாதம் மத்திய அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.
மாநில அரசுகள் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு பற்றி பரிசீலிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
மேலும் தீபாவளி பண்டிகை காலத்திற்கு பிறகு 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
தமிழகத்தில் இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனைகளுடன் திறக்க பட உள்ளது.
திரைப்பட படப்பிடிப்புகள் 150 பேர் வரை கலந்துக் கொள்ள அனுமதி அளித்தது.
நவம்பர் 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இ-பதிவு முறை கண்டிப்பாக தொடரும்.
நவ.10 முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க தமிழக அரசு அனுமதி பட்டு உள்ளது.












