திரையரங்குகளில் வெளியாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்.!

சென்னை : 28 நவம்பர் 2020

தமிழ் திரைப்பட உலகில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் புதுமுக இயக்குனராக அறிமுகமானவர்.

நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான இப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்த மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.

எனவே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்த நிலையில் படக்குழுவினர் மறுத்தது.

மேலும் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

எப்போது வெளியானாலும் மாஸ்டர் திரைப்படம் கொண்டாடாப்படும் என்றார் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனால் திரையரங்கில் தளபதி தரிசனத்திற்கு ரசிகர்கள் அனைவரும் தயாராக இருந்தனர்.

இதனிடையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் மிக பெரிய விலைக்கு வாங்கியதாக தகவல்கள் பரவியது.

இதை படக்குழுவினர் மறுக்கவில்லை என்பதால் நமது தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம். திரையரங்கு அதிபர்கள் பொறுமையுடன் காத்திருந்து ஒத்துழைக்க வேண்டும் என படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் எதிர்ப்பார்க்கலாம்.

பல மாதங்கள் காத்திருந்தாலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் தளபதி விஜய்யின் முடிவால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Official statement from producer on Thalapathy Vijay in Master release

error: Content is protected !!