நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதாரம் எடுத்த பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரத்தன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளார்.?

சென்னை : 28 நவம்பர் 2020

கொரோனா ஊரடங்காலும் தனது உடல் நிலையாலும் தனது அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என பலர் தங்களது கருத்துக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதாரம் எடுத்த பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரத்தன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

error: Content is protected !!