தளபதி 65 திரைப்பட அறிவிப்பால் தலைக்கு வந்த தல வலி..; வலிமை அப்டேட் கொடுத்த தலயின மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சென்னை 12 டிசம்பர் 2020

தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்த நேர் கொண்ட பார்வை திரைப்படத்துக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நடிகர் அஜித்குமார் இயக்குனர் வினோத் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் மறுப்படியும் இணையும் திரைப்படம் “வலிமை”.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த வலிமை திரைப்படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் அதற்கான வேலைகளை படக்குழுவினர் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன

சமீப காலமாகவே நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்தார்.

வலிமை திரைப்படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் தனது 65வது திரைப்பட அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த தளபதி 65 திரைப்படத்தின் அறிவிப்பு 10 டிசம்பர்  2020 அன்று வெளியானது.

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் எப்போது? என்று தொடர்ச்சியாக நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் ’வலிமை’ திரைப்படம் அப்டேட் குறித்து அஜீத் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது…

வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு…

படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித்குமார் அவர்களும் அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனிகபூர் ஆகிய இருவரும் இணைந்து ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.

முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

வலிமை’ திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பின்னரும் இந்த திரைப்படத்தின் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

என்பதே அஜித் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

 

error: Content is protected !!