நடிகர் தனுஷின் நடிக்கும் ‘கர்ணன்’ திரைப்படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.
நடிகர் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக இயக்கியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் தனுஷின் 41-வது திரைப்படம் ‘கர்ணன்’.
வி கிரேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வரும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
இந்த கர்ணன் திரைப்படத்தில் யோகிபாபு லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் தயாராகி உள்ளது.
இந்த நிலையில் ‘கர்ணன்’ திரைப்படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷூக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவாஜி நலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
13-12-2020
திரு. தனுஷ் அவர்கள்
திரைப்பட நடிகர்
சென்னை.
வணக்கம்.
தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம்.
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான்.
ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும்.
ஏனெனில் அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கனவே ”திருவிளையாடல்“ என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம்.
அதன்பிறகு “திருவிளையாடல் ஆரம்பம்“ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்த திரைப்படம் வெளிவந்தது.
அதே சமயத்தில் தாங்கள் நடித்து வெளிவந்த “உத்தமபுத்திரன்“ திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
அதுபோலவே ஆண்டவன் கட்டளை, ராஜா, பச்சை விளக்கு என்று நடிகர்திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
அதுபோன்ற சமூகப்படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை.
ஆனால், சரஸ்வதி சபதம். திருவிளையாடல். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படத் தலைப்பின் தனித்துவம் அப்படி.
“கர்ணன்“ என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல்தான். ஆனால் தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது,
மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் “கர்ணன்“ கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு சமூகத் திரைப்படத்திற்கு “கர்ணன்“ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இது லட்சோபலட்ச நடிகர்திலகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடியதாக அமையும்.
எனவே. “கர்ணன்“ என்ற தலைப்பினை மாற்றி அமைத்திடவேண்டுமென
எனவே திரைப்படத்தின் தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் அன்புள்ள
கே.சந்திரசேகரன்












