நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு.

சென்னை : 13 டிசம்பர் 2020

இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த பூமி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக இதில் அவருக்கு கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார்.

மற்றும் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த பூமி திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கி உள்ளார்.

இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட், ‘போகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர்.

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த பூமி திரைப்படத்தின் படத்தின் சிங்கிள் டிராக்காக வெளியாகிய தமிழனென்று சொல்லடா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பூமி திரைப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த திரைப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 14) வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த பூமி திரைப்படம் நடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/actor_jayamravi/status/1338042774566752259?s=19