புதியதாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் எதிரொலி – முன்னணி நடிகர்கள் நடித்த தமிழ் திரைப்படங்கள் வெளி வருவதில் சிக்கல்.?
புதிய கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் தடைபட்டன.
கடந்த மாதம் நவம்பர் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. 
இந்நிலையில் வெளிநாடுகளில் புதுவகை கொரோனா வைரஸ் இன்னும் வீரியமாக பரவி வருகிறது.
இதனால் பல வெளிநாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும்.
எனவே எப்.எம்.எஸ் எனப்படும் வெளிநாட்டு திரையீட்டு உரிமையும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் இந்த பொதுமுடக்கத்தால் அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்கள் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
லாபத்தில் கணிசமாக பாதிக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
நடிகர் சூர்யா முதல் ஜெயம் ரவி வரை பூமி திரைப்படமும் ஒடிடியில் வரும் பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது.












