தளபதி விஜய் நடிப்பில் வெளி வர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் இன்று மாரடைப்பினால் காலமானார்.

சென்னை 28 டிசம்பர் 2020

புகழ் பெற்ற பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார்.

தற்போது இவருக்கு வயது 48

நடிகர் அருண் அலெக்ஸாண்டர் கடந்த பல வருடங்களாக டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.

அதன் பின் நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அவதார்’ உள்ளிட்ட உலகப் புகழ்மிக்க படங்களின் முக்கியக் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

2016ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி பிகில், தற்போது திரைப்படத்திலும் நடிகர் அருண் அலெக்ஸாண்டர் நடித்துள்ளார்.

தற்போது வெளி வர தயாராகவுள்ள தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இன்று (திங்கட்கிழமை) மாலை நடிகர் அருண்  அலெக்ஸாண்டர் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்குத் திரையுலகினரும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!