ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தாயார் காலமானார்.

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடந்த 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்திய இசையுலகில் மிகவும் பிரபாலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.

தமிழ் திரைப்பட உலகில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய இவர் தனது இணையற்ற இசை மூலம் இந்தியளவில் பிரபலமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், சைனீஸ் என பல்வேறு மொழிகளில் சுமார் 145க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியா திரைப்பட உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரின் தந்தை ஆர் கே சேகர் மலையாள திரைப்பட உலகில் பணியாற்றியவர்

ஏ.ஆர. ரகுமான்  தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால்.

பெரும்பாளும் தனது தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்த வந்தவர்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார்.

தனது தாய் துணிச்சலானவர் என ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் திரையுலகினரும், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!