சின்னதம்பி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு இன்று காலமானார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும்
விஜயகாந்த் பிரபு சத்யராஜ் ராம்கி அர்ஜுன் உட்பட பி வாசு இயக்கத்தில் சின்னத்தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம்
பாஞ்சாலங்குறிச்சி ஆகா என்னப் பொருத்தம் உட்பட 25 வெற்றிப் படங்களுக்கு மேல் தயாரித்தவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில்் கே.ஆர்.ஜி. சத்யஜோதி தியாகராஜன் இராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஆர், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் தலைவர்களாக இருந்த பொழுதும் தற்பொழுது என் இராமசாமி என்கிற முரளி இராம நாராபணன் தலைவராக இருக்கையிலும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் உரிமையாளரான திரு. K.பாலு அவர்கள் நேற்று இரவு காலமானார்.
29 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் இளைய திலகம் பிரபு குஷ்பூ நடித்த சின்னத்தம்பி உள்பட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள கே.பி. ஃபிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் நோய் பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்கு இன்று (2.01.2021) சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது.
பாலு மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












