நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை பார்த்த மக்கள் செல்வன் டுவிட்டரில் பாராட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

சென்னை 10 ஏப்ரல் 2021

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை பார்த்த மக்கள் செல்வன் டுவிட்டரில் பாராட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி கர்ணன் திரைப்படத்தை பாராட்டி உள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி ஏஸ் தாணு தயாரிப்பில் உருவான “கர்ணன்” திரைப்படம் நேற்று 9ஆம் தேதி வெளியாகியுள்ளது.

சிலர் அசுரன் திரைப்படம் போல இல்லையே என்றும், இன்னும் சிலர் மாரி செல்வராஜின் முந்தைய படமான பரியேறும் பெருமாள் சாயலிலேயே இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் இதற்கு இருவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரின் முந்தைய படங்களினால் எழுந்த அதீத எதிர்பார்ப்பு தான் இப்படி கலவையான விமர்சனங்கள் வெளிவர காரணம் என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கர்ணன் திரைப்படத்தை பார்த்த மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி, இது பார்த்தே ஆகவேண்டிய படம் என்றும் சொல்லும் விதமாக “மிகச்சிறப்பான படம்.. மிஸ் பண்ணாதீர்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!