ஆண்டுதோறும் நடிகர் திலகம் பிறந்தநாளில் 108 பெண்களுக்கு அரை சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் அன்னை இல்லம் அறிவிப்பு!!

சென்னை 21 ஏப்ரல் 2021

ஆண்டுதோறும் நடிகர் திலகம் பிறந்தநாளில் 108 பெண்களுக்கு அரை சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் அன்னை இல்லம் அறிவிப்பு!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள்.

அவரது நடிப்பு, தொண்டு என அனைத்தும் தமிழக மக்களோடு கலந்து கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் 21ஆம் தேதி நடிகர் திலகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் தொடங்கி நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் சுமார் 108 பெண்களுக்கு அரை சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என அன்னை இல்லத்தின் சார்பாக நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான வழிமுறைகளும், நெறிமுறைகளும் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அன்னை இல்லம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!